எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டித்வா புயல் காரணமாக சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் நேற்று (3.12.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 546.05 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் 2.12.2025 காலை 5.30 மணி முதல் நேற்று (3.12.2025) காலை 5.30 மணி வரை சராசரியாக 61.70 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 135.30 மி.மீட்டர் மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்), குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 20 மி.மீட்டர் மழையும் (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது.
நேற்று (3.12.2025) காலை 6 மணி முதல் 12 மணி வரை சராசரியாக 15.18 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 108.60 மி.மீட்டர் மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்), குறைந்தபட்சமாக ஐஸ் ஹவுஸ் பகுதியில் 1.80 மி.மீட்டர் மழையும் (தேனாம்பேட்டை மண்டலம்) பெய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 22.10.2025 முதல் 30.10.2025 வரை மொத்தம் 5,98,200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. டித்வா புயல் மழையின் காரணமாக 30.11.2025 முதல் நேற்று முன்தினம் (2.12.2025) வரை 11,24,350 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று (3.11.2025) 2,74,600 நபர்களுக்கு காலை உணவும், 3,51,300 நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 2.12.2025 அன்று வரை 2,954 நிலையான மற்றும் நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,20,998 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (3.12.2025) 103 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 107 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சார்ந்த 300 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை சார்ந்த 50 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 170 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 29.11.2025 அன்று முதல் 3.12.2025 இன்று வரை மழையின் காரணமாக விழுந்த 64 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர் 1 லட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு 1 லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; இதுவரை 1,200 பேர் பலி
02 Dec 2025ஜகார்த்தா : ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்களால் நடப்பாண்டில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்த தகவல் வெளியீடு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று கார்த்திகை தீபத்திருவிழா: தி.மலை கிரிவலப்பாதையில் 1,060 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
புதுவையில் விஜய் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
02 Dec 2025புதுச்சேரி : புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.
-
வேலூரில் நெஞ்சை உலுக்கிய துயரம்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலியான சோகம்
02 Dec 2025வேலூர் : வேலூரில் மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சஞ்சார் சாதி கட்டாயமா? - மத்திய அமைச்சர் விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி : சஞ்சார் சாதி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமை என்று பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
02 Dec 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்
-
விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது ஏன்? - புதுச்சேரி சபாநாயகர் விளக்கம்
02 Dec 2025புதுச்சேரி : புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி வழங்காதது நல்லது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
-
செயல்பாட்டு திறனை மேம்படுத்த 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு
02 Dec 2025புதுடெல்லி : வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அர
-
வாழ்வு ஒளிமயமாக திகழ வேண்டும்: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2025சென்னை : மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள்
-
போதைப்பொருள் கடத்தல்: நடப்பாண்டில் மட்டும் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
02 Dec 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு 22 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 17 பேருக்கு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஆசிரியை கொலை வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி
02 Dec 2025தஞ்சை : ஆசிரியை கொலை வழக்கில் கைதான பெயிண்டர் சிறையில் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
-
பீகார் சட்டசபை சபாநாயகராக பிரேம்குமார் ஒருமனதாக தேர்வு
02 Dec 2025பாட்னா : பீகார் சட்ட சபை சபாநாயகராக பா.ஜ.க. மூத்த தலைவர் பிரேம் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
-
பேரிடரில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பிய பாக்.
02 Dec 2025கொழும்பு : இலங்கைக்கு பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு காலாவதியான பொருட்களை அனுப்பியது பாகிஸ்தான் அரசு.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது : கடற்படை தளபதி தகவல்
02 Dec 2025டெல்லி : பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
03 Dec 2025புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை
03 Dec 2025சென்னை : இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.


