முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போதைய தேவை கருணை அல்ல, உரிமைதான்; மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ரோல் மாடல் ஆக எடுத்து செயல்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
CM-2 2025-12-03

Source: provided

சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, உரிமை என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுகிறது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ரோல் மாடல் ஆக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை....

சென்னையில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மட்டும் இதுவரை 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் அரசியல், சமூக உரிமைகளை நிலைநாட்ட முக்கிய சட்டத்தை கொண்டு வந்தோம். அரசு இல்லங்களில் தங்கி படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.

மக்கள் பிரதிநிதியாக... 

உள்ளாட்சி பதவிகளில் மாற்றுத்திரனாளிகளுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறோம். சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான குரலை உருவாக்கி கொண்டிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள். மாற்றுத்திறனாளிகள் மனுக்களை மட்டும் அளிக்காமல் இனி மனுக்களை பெறப்போகிறீர்கள்.ஒவ்வொரு ஊரிலும் இருக்க கூடிய மாற்றுத்திறனாளிகளின் குரலை நீங்கள் எதிரொலிக்க வேண்டும். 

மற்ற மாநிலங்கள்... 

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல, உரிமை என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி களுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை மற்ற மாநிலங்கள் முன்னெடுக்க வேண்டும். 

தன்னம்பிக்கையோடு... 

மாற்றுத்திறனாளிகள் எந்த நிலையிலும் சோர்வடைந்து விடக்கூடாது. பிற்போக்குவாதிகளின் குரலை காதில் வாங்கி கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். கருணாநிதிக்கு ஒரு விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனது. ஆனாலும் விடாமல் உழைத்தார். சக்கர நாற்காலியில் இருந்தபோது கூட சுற்றிச்சுழன்று உழைத்தார். அந்த வில் பவர் உங்களுக்கும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து