முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Selvaperundhai 2024-04-19

Source: provided

சென்னை : இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 

தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். .தி.மு.க. தரப்பில் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டதும் பேச்சுவார்த்தை தொடங்கும்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து பிறகு தெரிவிக்கிறோம். இன்டியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நிலைபாட்டில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து