Idhayam Matrimony

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும்: அமைச்சர் டிஆர்பி.ராஜா நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      தமிழகம்
TRP Raja

சென்னை, தமிழ்நாடு விரைவில் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் என்று நந்தம்பாக்கத்தில் நடந்து வரும் யுஇஎஃப் வர்த்தக உச்சி மாநாட்டில் அமைச்சர் டிஆர்பி.ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஐக்கிய பொருளாதார மன்றத்தின் (யுஇஎஃப்) 3 நாள் வர்த்தக உச்சி மாநாடு, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்கள், 6 ஆயிரம் பார்வையாளர்கள், 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

யுஇஎஃப் பிரெசிடென்ட் அகமது புஹாரி சேர்மன் நவாப் சாதா ஆசிப் அலி, ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஆகியோர் தலைமை தாங் கினர். மாநாட்டை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தொடங்கி வைத்து. 200 அரங்குகளுடன் கூடிய வணிக கண்காட்சியைப் பார்வையிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும் வகையில் 'உன்னத தமிழகம்' என்ற தொலை நோக்குப் பார்வை கொண்ட வரைவு திட்டத்தையும் வெளியிட்டார்.

மாநாட்டில் அவர் பேசியபோது, "இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 11 சதவீத. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் வளர்ச்சி 10-11 சதவீதமாக உள்ளது. அதேநேரம், தமிழகம் 16% பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. நிர்ணயித்துள்ள 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நாம் மிக வேகமாக பயணித்து வருகிறோம். விரைவில் அதை எட்டுவோம்" என்றார்.

வணிக வளர்ச்சிக்கு ஏற்ற மாநிலம் தமிழகம். புதிய சிந்தனை கொண்ட இளம் தலைமுறையினரையும் இதில் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநாட்டுக்கு தலைமை வகித்த நிர்வாகிகள் கூறினர். மாநாட்டில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து