முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      உலகம்
Australian-PM-2025-12-16

சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பாராட்டியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் யூத மதக் கொண்டாட்ட நிகழ்வின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 14 அன்று மாலை, யூத மதப் பண்டிகையான ஹனுகா கொண்டாட்ட நிகழ்வின்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

போன்னிரிக் பகுதியில் வசித்துவந்த சாஜித், அவரது மகன் நவீத் அக்ரம் ஆகிய இருவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவரும் பழ வியாபாரியுமான சாஜித், 10 ஆண்டுகளாக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின்போது, அகமது அல் அகமது என்கிற மளிகைக்கடை உரிமையாளர் துணிவுடன் செயல்பட்டு ஒரு பயங்கரவாதியின் கையிலிருந்து துப்பாக்கியைப் பறித்ததால், மேலும் பலர் காப்பாற்றப்பட்டனர். அப்போது அகமது அல் அகமதுவுக்கு குண்டடிபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தனது எக்ஸ் தளத்தில், “அகமது, நீங்கள் தான் ஆஸ்திரேலியாவின் ஹீரோ. போண்டி கடற்கரையில், மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் பெரும் ஆபத்தை கையாண்டீர்கள். இப்படிப்பட்ட மிகவும் இக்கட்டான நேரங்களில் தான், ஆஸ்திரேலிய மக்களின் சிறந்த குணங்களை நாம் காண முடிகிறது. ஒவ்வொரு ஆஸ்திரேலியர் சார்பாகவும், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து