முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மட்டும் வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      தமிழகம்
Election-Commision 2023-04-20

சென்னை, சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 40,04,694 பேரில் எஸ்.ஐ.ஆருக்கு பின் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 40,04,694 பேரில் எஸ்.ஐ.ஆருக்கு பின் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆருக்கு முன் - 40,04 694, எஸ்.ஐ.ஆருக்கு பின் -25,79,676, நீக்கம் - 14,25,018. சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்ட விவரம்:

1)வாக்காளர்களின் எண்ணிக்கை - 26,79,676.

2) இறந்த வாக்காளர்கள் - 1,56,555.

3) முகவரியில் இல்லாதவர்கள் 27,328.

4)குடி பெயர்ந்தோர் - 12,22,164.

5) இரட்டை பதிவுகள் - 18,772.

6) மொத்தம் நீக்கப்பட்டோர் 13,25,018.

7) ஆண்கள் - 12,47,690 பேர்.

8) பெண்கள் - 13,31,243 பேர்.

9) இதர பிரிவினர் - 743 பேர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து