முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் ஹிஜாப் சர்ச்சை: அரசு வேலையை உதறிய பெண்..!

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025      இந்தியா

பீகார் ஹிஜாப் சர்ச்சையால் அரசு வேலையை வேண்டாம் என்ற புறக்கணித்த பெண் டாக்டர்,  பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 10-வது முறையாக நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், பாட்னா நகரில் கடந்த 15-ந்தேதி நடந்த அரசு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹிஜாப் அணிந்திருந்த பெண் ஆயுஷ் டாக்டர் ஒருவருக்கு சான்றிதழை வழங்கியபோது, அவரிடம், ஹிஜாப்பை நீக்குங்கள் என சைகை காட்டினார். அந்த பெண் அதனை கவனித்து செயல்பட முற்படுவதற்கு முன், பெண்ணின் வாய், கன்னம் தெரியும்படி அந்த பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து, கீழே இழுத்து விட்டார். மேடையில் இருந்த சிலர் சிரித்தபோது, துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, அவரை தடுக்க முயற்சித்தது வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ பரவியதும், காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிகள் அவரை கடுமையாக சாடியுள்ளன. அவருடைய செயல் வெட்கக்கேடானது மற்றும் வெறுப்பூட்டுகிறது என்றும் காங்கிரஸ் சாடியது. இந்த நிலையில், நுஸ்ரத் பர்வீன் என்ற அந்த பெண் டாக்டர் இன்று (சனிக்கிழமை) அரசு வேலையில் சேரவிருந்த சூழலில், பீகார் அரசு வேலையில் சேருவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. 

இதுபற்றி நுஸ்ரத்தின் சகோதரர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர் முற்றிலும் வெறுத்து விட்டார். இந்த சம்பவத்தில் அவர் கேவலப்படுத்தப்பட்டு உள்ளார். பீகார் அரசு வேலையில் அவர் சேரமாட்டார் என கூறினார். அது அவருடைய தவறு இல்லை என நாங்கள் எடுத்து கூறி அவரை சமரசப்படுத்த முயற்சித்து வருகிறோம். ஒரு சிலரின் செயலுக்காக, அவர் ஏன் பதவியை கைவிட வேண்டும்? என கேட்டுள்ள அவர், ஆனால் மனதளவில் பெரிய பாதிப்பை அடைந்திருக்கிறார். அதனால், வேலையில் அவர் சேரமாட்டார் என கூறினார். இந்நிலையில், பீகாரை விட்டு வெளியேறி பெற்றோர் வசிக்கும் கொல்கத்தா நகருக்கு நுஸ்ரத் சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து