முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      விளையாட்டு
Arjun-2026-01-02

மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்....

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் ஆலோசகராக உள்ளார். இவரது மகனாக அர்ஜூன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். ஐ.பி.எல். தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்தார். அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.

கவனம் செலுத்த...

அவர் தற்போது ஐ.பி.எல். தொடருக்காக பந்து வீச்சு மட்டும் பேட்டிங்கில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவரது பேட்டிங்கை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் யுவராஜ் சிங் தந்தையுமான யோகராஜ் பாராட்டி உள்ளார். அதில், "அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும், அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன், அவர் சச்சினைப் போலவே பேட்டிங் செய்கிறார்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து