முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

கோவா, 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்ட சமுத்திர பிரதாப் கப்பலை  மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2 மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை உருவாக்கி உள்ளன. அதில் ஒரு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் நேரடியாக இணைக்கப்படுகிறது. இதற்காக கோவாவில் நேற்று (திங்கட்கிழமை) பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த கப்பல் கடலில் சிந்தும் எண்ணெய் கசிவுகளை கண்டறியவும், பிரித்து எடுக்கவும், பிசுபிசுப்பான எண்ணெயிலிருந்து மாசுகளை மீட்டெடுக்கவும் உகந்த தொழில்நுட்பங்களை கொண்டது. இது அதிக துல்லியமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் படைத்தது. இந்தக் கப்பலில் 60 சதவீதத்திற்கு மேலாக உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இது உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

சமுத்திர பிரதாப் கப்பல் 114.5 மீட்டர் நீளமும், சுமார் 4,200 டன் எடையும் கொண்டது. இது இந்திய கடலோர காவல்படைக் கப்பல்களில் மிகப்பெரிய கப்பலாகும். இது சுமார் 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்டது. தெற்கு கோவாவில் உள்ள ஷிப்யார்டு தளத்தில் இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து