முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      உலகம்
Trump 2024-12-21

வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா மீது அதிக வரியை விதித்து கடுமையாக நடந்து கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பாக தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது மீண்டும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் வரியை உயர்த்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இது குறித்து அவர் கூறியதாவது:- அடிப்படையில் அவர்கள் (இந்தியா) என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்கள். நாம் இந்தியா மீதான வரியை மிக விரைவாக உயர்த்த முடியும். அது அவர்களுக்கு மோசமாக இருக்கும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து