முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு

புதன்கிழமை, 7 ஜனவரி 2026      உலகம்
Venezula-President-1

காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவரின் மகன் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா.

இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் வெனிசுவேலாவின் தலைமைக்கு வலுசேர்க்கும் வகையில் உறுதுணையாக இருப்பேன் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்ற பிறகு கூடிய பேரவையில் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா உரையாற்றினார். இடைக்கால அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டு உறுதி மொழி எடுத்துகொண்டார்.

பின்னர் தனது தந்தை நாடு கடத்தப்பட்டுள்ளது குறித்து அவர் பேசியதாவது, ''தந்தையே, உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் வலிமையுடையவர்களாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள். நீங்கள் திரும்பும் வரை நாட்டு மக்களுக்கான கடமைகளைச் செய்வோம். நம் தாய் நிலம் மேன்மையான மக்களின் கையில்தான் உள்ளது தந்தையே. வெனிசுவேலா நிலத்தில் நான் விரைவில் உங்களை கட்டியணைப்பேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

என் தாய் சிலியாவும் என்னை விரைவில் தாய் நிலத்தில் சந்திப்பார். தாய் நிலத்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்வீர்கள். தாய் நாட்டிற்கு என்ன வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நீங்கள் என்றுமே வெனிசுவேலாவின் தலைவர்தான்'' எனக் குறிப்பிட்டார். அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிகோலஸ் மதுரை நியூ யார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதே நாளில், குய்ர்ரா இவ்வாறு பேரவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து