முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      இந்தியா
nitish-kumar

பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.

பீகாரில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியானார். இந்நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரான கே.சி. தியாகி, பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

நீண்டகாலம் முதல்-மந்திரியாக சேவையாற்றி வரும் அவர், பீகார் அரசியல் மட்டுமின்றி தேசிய அளவில் பொது வாழ்வில், அரசாட்சிக்கு புதிய வழிகாட்டலை ஏற்படுத்தி தந்து, சமூகத்தில் சமத்துவம் ஏற்படுத்தியவர் என புகழ்ந்து கூறியுள்ளார். சமூக நீதி, நல்ல நிர்வாகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என தொடர்ச்சியாக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவர் தேசிய அங்கீகாரம் பெற தகுதி படைத்தவர். பலர் வாழ்நாளிலேயே இந்த கவுரவம் பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சார்பாக, நிதிஷ் குமாருக்கு இந்த கவுரவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதனால், வரலாறு நீண்டகாலம் உங்களை பாராட்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து