முக்கிய செய்திகள்
முகப்பு

20 பில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் லெஸ்போஸ் தீவில் கண்டுபிடிப்பு

Lesvos kormos 2022 01 10

கிரீஸ் நாட்டில் உள்ள லெஸ்போஸ் தீவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிசய மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட மரம் ஒன்று மட்கி போகாத நிலையில் அப்படியே அதன் ஈரத்தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், இந்த மரத்தை ஆராய்ச்சி செய்ததில் கிளைகளும் வேர்களும் நல்ல நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் ஆய்வில் 20 மில்லியன் ஆண்டுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மரம் நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என்றும், அப்போது எரிமலை சாம்பல் அந்த மரத்தின் மேல் பரவி இருக்கலாம், அதனால் இந்த மரம் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட அந்த மரத்தின் வயதை ஆய்வு மூலம் கண்டறியலாம்  இது மிகுந்த ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்: