எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ராஜா மந்திரி' ஷாலின் சோயா
'ராஜா மந்திரி' ஷாலின் சோயா
'ராஜா மந்திரி' மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார் ஷாலின் சோயா
"தமிழ் மொழி எனக்கு கடினமாக இருந்தாலும், அதன் மீது நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்! விரைவில் வெளியாக இருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் என்னை எவ்வாறு ஏற்று கொள்கிறார்கள் என்பது தெரியும்", என்கிறார் கேரளத்து அழகு புயல் ஷாலின் சோயா.
இயக்குனர் சுசீந்தரனின் உதவியாளரான உஷா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க, Etcetera Entertainment V மதியழகு, R ரம்யா மற்றும் இணை தயாரிப்பாளர் PG முத்தையா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
"இந்த படத்தில் நான் நடிக்க தொடங்கியதுமே, எனக்கு வேறு மொழிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் முதலில் தமிழக மக்கள் என்னை ஏற்று கொண்டால் தான் மற்றதை பற்றி யோசிக்க முடியும்", என்கிறார் ஷாலின். மேலும் படத்தின் கதையை பற்றி அவர் கூறுகையில், "அண்ணன் - தம்பி இருவர்க்கும் இடையே ஆன உறவை எதார்த்தமாக கூறும் படம் தான் 'ராஜா மந்திரி'. கலையரசன் மற்றும் காளி வெங்கட் நடிக்கும் இந்த படம் முற்றிலும் நகைச்சுவை அம்சங்களை கொண்டது" என்று சொல்கிறார் ஷாலின் சோயா. நடிப்பு மட்டும் இல்லாமல், இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஷாலின். தனது கல்லூரி காலங்களில் பல குறும்படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் ஷாலின் சோயாவிற்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியாக சொல்லாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


