எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு கிடாயின் கருணை மனு
ஒரு கிடாயின் கருணை மனு
உலக அளவில் தரமான , மிகுந்தப் பொருட் செலவில் ஏராளமானப் படங்களை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தமிழில் தங்களது தடத்தை பதிக்க வருகிறது. 'ஒரு கிடாயின் கருணை மனு' என்றத் தலைப்பு இடப்பட்டு உள்ள இந்தப் படத்தின் கதை, நமது கலாச்சாரத்தின் முக்கியமான குறிப்பேடுகளை மையப் படுத்தி தயாரிக்கப் படும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார் விதார்த்.
மைனா, வீரம் ,ஆள் , முதல் தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் குற்றமே தண்டனை ஆகியப் படங்களை தொடர்ந்து 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் இவர் நடித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. தென்னகத்தில் குறிப்பாக தமிழில் தங்களது தயாரிப்பு நிறுவனத்தை சீரிய முறையில் நிர்மாணிக்க இருக்கும் ஈராஸ் நிறுவனம், தயாரிப்பு நிர்மாணம், வடிவமைப்பு, விளம்பர யுத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சீரிய முறையில் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்க ஆரம்பித்து உள்ளது.
'ஒரு கிடாயின் கருணை மனு' இந்த நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் முதல் படமாகும். அருப்புக்கோட்டையில் துவங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. தற்போது நாங்கள் பிராந்திய மொழிகளில் மிகுந்தக் கவனம் செலுத்தி வருகிறோம். வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்து எடுத்து நிறைய திறமைகளை அறிமுகப் படுத்தி எங்கள் நிறுவனத்துக்கு என்றே ஒருத் தனிப் பெயரை ஈட்ட முடிவு செய்தது உள்ளோம். அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு, அந்த மொழியின் வட்டாரத்தை சார்ந்த கதைகளை தான் நாங்கள் தேடி வருகிறோம். அப்படிப்பட்ட ஒருத் தேடலில் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு' கதையும் எங்களுக்கு கிடைத்தது.
அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இந்தக் கதையைக் கூறும் போதே நாங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டோம். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து வித்தியாசமான , தெளிவான கதைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நடிக்கும் விதார்துக்கு இணையாக கதாநாயகியாக நடிக்கிறார் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா. எங்களது அடுத்தடுத்த படங்களை நாங்கள் விரைவில் அறிவிக்க உள்ளோம். ஒரு சிலப் பெரிய பட்ஜெட் படங்களும் , பல சிறிய பட்ஜெட் படங்களும் இதில் அடக்கம் ' எண்டு தன்னம்பிக்கையோடுக் கூறினார் , ஈராஸ் நிறுவனத்தின் தென்னக பிரிவின் துணைத் தலைவர் சாகர் சத்வாணி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


