முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ சிறையில் கலவரம் - 12 பேர் பலி

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

மான்டெரி, பிப். 23 - மெக்சிகோ சிறையில் போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டோர் தப்பி சென்று விட்டனர். இறந்தவர்கள் அனைவரும் வளைகுடா கும்பலை சேர்ந்தவர்கள். தப்பிய 30 பேரும் மெக்சிகோவின் ஸீடாஸ் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சிறை காவலர்களின் உதவியோடு அவர்கள் தப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. ஞாயிற்று கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த கலவரத்தில் 44 பேர் கடும் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். இந்த கலவரத்தில் தங்களுக்கு தொடர்பிருப்பதை 9 சிறை காவலர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

இந்த இரு அமைப்புகளும் 2010 ம் ஆண்டு தங்களின் கூட்டணி பிரிந்தது முதலே தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு மான்டெர்ரியில் உள்ள அபோடாக்கா சிறையில் நடந்த இந்த சம்பவம் மெக்சிகோ சிறைகளில் இதுவரை நடந்த கலவரங்களில் மிக மோசமானதாகும். இது தொடர்பாக பேசிய அரசின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் டொமென்ஸ் கூறுகையில், இந்த கலவரம் தொடர்பாக பிடிபட்டுள்ள 18 காவலர்களில் 9 பேர் கலவரத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். சிறைக் காவலர்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு அரசுக்கு துரோகம் இழைத்துள்ளனர். 

9 காவலர்கள் மற்றும் மூன்று சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சிறையில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாலை ஒரு மணியில் இருந்து 1.30 மணிக்குள் அவர்கள் தப்பி சென்றுள்ளனர் என்றார். சிறை அமைந்துள்ள நுயேவோ லியாஸ் மாநில ஆளுனர் ரோட்ரிகோ மெடினா சிறையில் இருந்து தப்பி சென்றவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர்களை பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 4 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago