முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. தீர்மானம் எதிரொலி: தமிழர் பகுதியில் துப்பாக்கிச் சூடு

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

யாழ்ப்பாணம், மார்ச்.24 - ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது. இதனால் இலங்கை கிளிநொச்சி நகரில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவர்களை இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.  விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்த செய்தி அறிந்ததும் இலங்கை தலைநகர் கொழும்பில் பதட்டம் ஏற்பட்டது.

பல்வேறு இயக்கங்கள் சார்பில் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனினும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமில்லை. கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ராணுவம் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ராணுவ நடமாட்டம் அதிகளவில் இருந்தது. வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. ராணுவம் குவிக்கப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்