முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் நிலைய பாதுகாப்பை ஆய்வு செய்கிறது அமெரிக்கா

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.26 - அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலைய பாதுகாப்பை அந்நாட்டின் அணு ஒழுங்கு முறை ஆணையம் இரண்டு கட்டமாக ஆய்வு செய்யவுள்ளது. ஜப்பான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி மற்றும் அங்குள்ள அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவியதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. 

இப்போது ஜப்பானில் இருந்து வரும் தகவல்களை மிகவும் கவனமுடன் ஆராய்ந்து வருகிறோம். எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்.ஆர்.சி. தலைவர் ஜாக்கோ தெரிவித்துள்ளார். 

அணு உலை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் அணு உலைகளை ஆராய பணிக்குழு அமைப்பதற்கு அணு ஒழுங்குமுறை ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த குழுவில் என்.ஆர்.சி.யின் இப்போதைய மேலாளர் மற்றும் முன்னாள் நிபுணர்கள் இடம் பெறுவர். இந்த குழு ஜப்பானில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை குறுகிய கால அடிப்படையிலும் நீண்ட கால அடிப்படையிலும் ஆராயும். இது தொடர்பான அறிக்கையை அடுத்த 6 மாதத்திற்குள் இந்த குழு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்