முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் பூங்காவில் சிங்கம் 3 குட்டிகளை ஈன்றது

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

தாம்பரம், ஏப்.13 - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிங்க உலாவிடத்தில் பிறந்த பத்து வயதுள்ள கவிதா என்ற பெண் சிங்கம் இதே சிங்க உலாவிடத்தில் பிறந்த பத்து வயதுள்ள ராகுல் என்ற ஆண் சிங்கத்துடன் இணைந்து 27.3.12 தேதியன்று அதிகாலை மூன்று அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம் சிங்க உலாவிடத்தில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் கவிதா, குட்டி ஈன்ற போது தாய் சரியாக பராமரிக்காததால் குட்டிகளை கைவளர்ப்பு செய்ய வேண்டி வந்தது. இம்முறை இதைத் தவிர்க்கும் பொருட்டு குட்டிபிறப்பதற்கு ஒரு மாதம் முன்பே, தாய் சிங்கம் தனியாகப் பிரிக்கப்பட்டு மறைவான மற்றும் காற்றோட்ட வசதி கொண்ட அறையில் வைத்து உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. குட்டி பிறக்கும் சமயம் மற்றும் குட்டி பிறந்த பின் எந்தவித இடையூறும் ஏற்படாதிருக்க சிங்க உலாவிடம் மூடப்பட்டது. குட்டிகள் கண்கள் திறந்த பின்பே சிங்க உலாவிடம் திறக்கப்பட்டு எந்த இடையூறும் ஏற்படா வண்ணம் சிங்க உலாவிட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மூன்று குட்டிகளுக்கும் தேவையான தாய்ப்பால் கிடைப்பதற்காக தாய்க்கு தினமும் வழக்கமாக வழங்கப்படும் மாட்டிறைச்சியுடன் நான்கு கோழிகள், ஒரு லிட்டர் பால் மற்றும் இரண்டு முட்டைகள் சிறப்பு உணவாக வழங்கப்பட்டு வருகின்றன. தாய் மற்றும் குட்டிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் வன விலங்கு மருத்துவராலும் பூங்கா அதிகாரிகளாலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு உயிரியல் பூங்காவின் இயக்குனர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்