முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை துறைமுகத்தில் மெகா பெட்டக மையம்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை :ஏப்.13 -  சென்னைதுறைமுகத்தில் ரூ.3686 கோடி செலவில் மெகா பெட்டக மையம் அமைக்கப்படும் என்று சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் அதுல்ய மிஸ்ரா கூறினார். நேற்று சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் அதுல்ய மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:​-இந்தியாவில் 2​வது பெரிய சரக்கு கையாளும் துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. 2011-​12-ம் ஆண்டில் 15 லட்சத்து 58 ஆயிரத்து 343 பெட்டக சரக்குகளை கையாண்டு உலகிலேயே 91​வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நிலக்கரி மற்றும் இரும்பு தாதுக்களை கையாளுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்த போதிலும், இந்த நிதியாண்டு இறுதியில் 55.71 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் பாரதி துறையின் வடக்கில் ரூ.3686 கோடி செலவில் மெகா பெட்டக மையம் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் கூடுதலாக 4 மில்லியன் பெட்டக சரக்குகளை கையாள முடியும். 2011-​12ம் ஆண்டில் சென்னை துறைமுகம் 2043 கப்பல்களை கையாண்டதன் வாயிலாக மொத்தத்தில் 55.71 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. துறைமுகத்தில் தானே ஏற்றி இறக்கும் கார் நிறுத்தும் முனையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. மின்சார செலவை குறைக்கும் வகையில் தென் தமிழகத்தில் ரூ.79 கோடி செலவில் காற்றாலை அமைக்கப்படும். ரூ.600 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் சென்னை எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை திட்டம், 2013-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே முடிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்