முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறையை மக்களின் நண்பனாக மாற்றியுள்ளேன்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - மைனாரிட்டி திமுக ஆட்சியில் பல்வேறு அதிகாரமையங்கள் இருந்தது. ரவுடிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. இப்படி இருளாக இருந்த காவல் துறையை மக்களின் நண்பனாக மாற்றியுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா பெருமையுடன் கூறியுள்ளார். காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டு ஒன்றுக்கொன்று முரணான உத்தரவுகளை பிறப்பித்து வந்ததால், யாருடைய உத்தரவை செயல்படுத்துவது என்று தெரியாமல் பெருத்த பாதிப்புக்கு காவல் துறையினர் ஆளாயினர். இதன் காரணமாக சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தான் நடைபெற்றது. ரவுடிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற விதம்; சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் நடைபெற்ற போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்தது; சென்னை உயர் nullஙுநீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள வழக்கறிஞர்களையும், nullநீதிபதிகளையும், பொதுமக்களையும் காவல் துறையினர் தாக்கியது; சென்னை உயர் nullநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர், மத்திய  மாநில அமைச்சர்கள், உச்ச nullநீதிமன்ற, உயர் nullநீதிமன்ற nullநீதிபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு முன்பே ரவுடிகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியது என பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.  காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. இப்படி இருந்த காவல் துறையை, மக்களின் நண்பனாகவும், வன்முறையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் வகையில் நான் மாற்றி அமைத்துள்ளேன்.

இதன் காரணமாக, அமளிக் காடாக விளங்கிய தமிழகம் அமைதிப் nullங்காவாக மாறி வருகிறது. குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து, குற்றங்களை கண்டுபிடித்தலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  பிற மாநில காவல் துறையினரை ஒப்பிடுகையில், நமது மாநில காவல் துறையினர் திறம்பட பணிபுரிந்து வருகின்றனர்.   தி.மு.க.​வினர் தங்கள் கட்சியினர் மீதும், முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் மீதும்  உண்மைக்கு மாறாக நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுகின்றன என்ற தவறான குற்றச்சாட்டுக்களை இந்த சட்டப் பேரவையிலும், அவைக்கு வெளியிலேயும் தெரிவித்து வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது, சட்ட விரோத கும்பல்கள் நிலம் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர்களை மிரட்டியும்; அவர்களைக் கடத்திச் சென்றும்; அவர்களது சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு பதிவு செய்வதையும்; போலியான ஆவணங்களை தயார் செய்து பொதுமக்களின் சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தன. இதனால் பாதிக்கப்பட்டோர் புகார் அளிப்பதற்கு கூட அஞ்சினர். அதையும் மீறி அளிக்கப்பட்ட புகார்களில் பெரும்பான்மையானவை உதாசீனப்படுத்தப்பட்டன. இது போன்ற அடாவடிச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எனது தலைமையிலான அஇஅதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நில அபகரிப்பு புகார்களின் மீது சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நில அபகரிப்பு குறித்து துணிச்சலுடன் காவல் துறையினரிடம் புகார் தர முன் வந்தனர். உண்மையில் சொல்லப் போனால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்திலேயே நில அபகரிப்பு புகார்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்டுள்ளன. காவல் துறை நடவடிக்கை எடுக்காத இனங்களில், சிலர் உயர் nullதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்த நிகழ்வுகளும் உள்ளன. 2006​லிருந்து 2011​ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்திலேயே, நில அபகரிப்பு, மோசடி மற்றும் போலி பத்திரங்கள் குறித்து 6615 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் nullர்வாங்க விசாரணைக்குப் பின் 1,887 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 375 வழக்குகளில் nullதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னை காவல் துறையில் மத்திய காவல் பிரிவில் நில ஆக்கிரமிப்பு மற்றும் மோசடி குறித்து விசாரிக்க உதவி ஆணையாளர் தலைமையில் தனிப் பிரிவு ஒன்றும் இருந்தது.  முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அதிகார மையங்களில் இருந்தவர்களின் ஆதரவோடு, எவ்வித அச்சமுமின்றி நடைபெற்று வந்த நில அபகரிப்பு மோசடிகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அச்சத்தின் காரணமாக புகார் கொடுக்க முன் வரவில்லை. புகார் அளித்தவர்களின் புகார்கள் மீதும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 375 இனங்களில் nullநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், எதிரிகளை கைது செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களை மீட்பதற்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.  

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, வேண்டுமென்றே நில அபகரிப்பு புகார்கள் தொடர்பான வழக்குகள் போடப்படுகின்றன என்பது முற்றிலும் தவறானது. எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்ட பாரபட்சமற்ற நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் புகார் கொடுக்கின்றனர் என்பதும்; அவ்வாறு கொடுக்கப்படும் புகார்கள் காரணமாக நிலங்களை இழந்தவர்கள் தங்கள் நிலத்தை மீளப் பெற்று வருகின்றனர் என்பதும் தான் உண்மை. இதனை காணும் போது, நில அபகரிப்பாளர்களால் நிலத்தை இழந்தவர்கள் அதிக அளவில் புகார்களை கொடுத்து வருகின்றனர் என்பது தான் உண்மை நிலை.  தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியமானவர்கள் மீது நில அபகரிப்பு வழக்குகள் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக போடப்படுகின்றன என்ற ஒரு உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை தி.மு.க.வினர் அடிக்கடி சொல்லி வருகின்றனர். அவ்வாறு கூறுவதன் மூலம், நில அபகரிப்பு பழியிலிருந்து தப்பி விடலாம் என்று நினைக்கின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப, நில அபகரிப்பு குறித்த ஒரே ஒரு புகார் பற்றி இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன். 

29.11.2011 அன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் என். சேஷாத்ரி குமார் என்பவர் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், தனது குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த 6 கிரவுண்ட் நிலத்தை மு.க. ஸ்டாலின் வாங்கி அங்கு குடியேறியதாகவும், அதன் பின்னர் அந்த வீட்டிற்கு அடுத்து உள்ள தனது வீட்டை விற்க கட்டாயப்படுத்தி, திரு. ராஜா சங்கர்,  ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட சிலர் தனது வீட்டை மு.க. ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும்; அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16.7.2010 அன்று புகார் செய்ததாகவும்; ஆனால் காவல் துறையினர் அதனை வாங்க மறுத்துவிட்டதாகவும்; அதன் பிறகு பி. வேணுகோபால் ரெட்டி பெயரில் 5ஙூ கோடி ரூபாய்க்கு வரைவோலை கொடுத்து தனது வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள் என்றும், தற்போது இந்த வீடு உதயநிதி ஸ்டாலின் பெயரில் 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு  மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை அதில் குடியிருந்து வருகிறார் என்றும் புகார் கூறியுள்ளார்.  மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும்  வேணுகோபால் ரெட்டி,  மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர்,  ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தன் வீட்டை மீட்டு தருமாறும் தனது புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர்  வேணுகோபால் ரெட்டி,  மு.க. ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலின்,  ராஜா சங்கர், மற்றும்  ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர். உடனே மு.க.ஸ்டாலின் தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ளும் பொருட்டு, ஆவேசமாக காவல் துறை தலைமை இயக்குநரை சந்திக்கச் சென்று, தன்னை உடனே கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.      துணை முதலமைச்சராய் இருந்து காவல் துறை சம்பந்தப்பட்ட சில கோப்புகளை கவனித்தவர் மு.க. ஸ்டாலின்; காவல் துறை மானியக் கோரிக்கையின் மீது இரு முறை பதில் அளித்தவர்  ஸ்டாலின்.  அப்படிப்பட்ட  ஸ்டாலினுக்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட ஒரு புகாரின் பேரில் தேவைப்பட்டால், புலன் விசாரணை அதிகாரி தான் கைது செய்வார் என்பது தெரியாதா? நிச்சயம் தெரியும். ஆனாலும், தனது வீராப்பினை காட்டுவதற்காக, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். மேலும், nullநீதிமன்றத்தின்   மூலமாக வழக்கை சந்திப்பதாக சவாலும் விடுத்தார். அவர்களே! இந்த வழக்கை,  ஸ்டாலின், nullநீதிமன்றத்தின் மூலமாக சந்தித்து தான் நிரபராதி என்பதை நிருபித்தாரா என்றால் இல்லை. இந்தச் சூழ்நிலையில், மேற்படி சொத்து சட்டப்படி வாங்கப்பட்டது என்றும், இதில் எந்த விதமான நில அபகரிப்பும் இல்லை என்றும் தெரிவித்து, காவல் துறையினரால் தொடுக்கப்பட்ட இந்த குற்ற வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு  வேணுகோபால் ரெட்டி சென்னை உயர் nullநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார்.  இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மேற்படி சொத்தை வாங்கிய  வேணுகோபால் ரெட்டிக்கும்; மேற்படி சொத்தை விற்ற  சேஷாத்ரி குமாருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.  இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்படி சொத்தை வாங்கிய  வேணுகோபால் ரெட்டி, விற்பனையாளர்  சேஷாத்ரி குமாருக்கு வரைவோலை மூலம் 1 கோடியே 75 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட புகார்தாரர் சேஷாத்ரி குமார், வேணுகோபால் ரெட்டி,  மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், மற்றும் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான புகாரினை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்து, அந்த வழக்கினை முடித்து விடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து  சென்னை உயர் nullநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையினரால் போடப்பட்ட வழக்கில் ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் nullதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்யவில்லை.  nullநீதிமன்றத்திற்கு வெளியே புகார்தாரரும், குற்றம் சுமத்தப்பட்ட முதல் நபரும் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதை அடுத்து, அதன் மூலம் புகார்தாரருக்கு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளதை அடிப்படையாக வைத்துத் தான் இந்த வழக்கு சென்னை உயர் nullநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தப் புகாருக்கு உள்ளானவர்கள், மேற்படி இடத்திற்கு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் குறைவாக கொடுத்து நிலத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பது தானே இதிலிருந்து தெரிய வருகிறது? இதை நில அபகரிப்பு என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்லி அழைப்பது? இதிலே கவனிக்க வேண்டிய மற்றுமொரு அம்சம் என்னவென்றால், சென்னையின் மிக முக்கியப் பகுதியான தேனாம்பேட்டையில்,  2ஙூ  கிரவுண்டு நிலம் மற்றும் 4,432 சதுர அடி கொண்ட கட்டடத்தை வெறும் 20,000 ரூபாய்க்கு வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறார் திரு. உதயநிதி ஸ்டாலின். இதற்கு முன்பு இருந்த வாடகைதாரர் 1 லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வாடகை அளித்து இருக்கிறார். ஆனால், தற்போது வெறும் 20,000 ரூபாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. வேணுகோபால் ரெட்டி ஏன் இவ்வளவு குறைந்த வாடகைக்கு இந்த வீட்டை அளித்தார் என்று மு.க. ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்!    

காவல் துறையினர் தி.மு.க. வினர் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்கிறார்கள் என்று சொன்னால், பதிவு செய்யப்பட்ட 1,225 வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் தி.மு.க.வினரா என்றால் நிச்சயமாக இல்லை. தவறு செய்த அனைவர் மீதும் தான் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த அரசு அமைந்ததிலிருந்து 12.4.2012 வரை, 34,703 நில அபகரிப்பு புகார்கள் பெறப்பட்டுள்ளன. nullர்வாங்க விசாரணைக்குப் பின் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,225. புலன் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 74. ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து மீட்கப்பட்ட சொத்துக்கள் 1,317.15 ஏக்கர் மற்றும் 4.44 லட்சம் சதுர அடி மனைகள்.  மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 758.04 கோடி ரூபாய் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்