முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று வருகிறது

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று வருகிறது. தமிழ்நாடு​ஆந்திரா அரசுகளிடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் தரவேண்டும். சென்னை நகரில் கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று முதல்​அமைச்சர் ஜெயலலிதா ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்ற ஆந்திர மாநில அரசு 10 நாட்களுக்கு முன்பு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டது. இந்த தண்ணீர் தெலுங்கு​கங்கை கால்வாய் வழியாக 152 கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வரும். அங்கிருந்து 25 கி.மீ. நீள ண்டி கால்வாய் வழியாக ண்டி ஏரியை வந்தடையும். கண்டலேறு அணையில் ஆரம்பத்தில் 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பராமரிப்பு பணி நடந்த பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க தண்ணீர் அளவு சிறிது குறைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் வேகம் குறைந்தது.

தற்போது மீண்டும் 500 கனஅடி வீதம் தண்ணீர் விடப்பட்டது. இப்போது 580 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா தண்ணீர் நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. இன்று காலையில் இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 'ஜிரோ' பாயிண்டை தொடும். பின்னர் ண்டி கால்வாய் வழியாக நாளை  ண்டி ஏரியை சென்றடையும். கோடைகாலமாக இருப்பதால் ஆரம்பத்தில் 100 கனஅடி வீதம் ண்டிக்கு தண்ணீர் வரும். பின்னர் படிப்படியாக அளவு அதிகரிக்கப்பட்டு முழு அளவை எட்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்