முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பியகோப்பை கால்பந்து போட்டி ஸ்பெயின்மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

கீவ், ஜூலை. - 3 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தாலி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி 4- 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி தொடர்ந்து 2- வது முறையாக கோப் பையை வென்று சாதனை படைத்து உள்ளது.  ஸ்பெயின் அணி தரப்பில், முன்னணி வீரர்களான டேவிட் சில்வா, ஜோர்டி ஆல்பா, டொரஸ், ஜியன் மதா ஆகி   யோர் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.  ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ   ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த ஒரு மாத காலமாக வெகு விமர்சையாக நடத்தி வந்தன.  கடந்த மாதம் 8-ம் தேதி இதன் லீக் போட்டிகள் துவங்கின. இதனைத் தொடர்ந்து கால் இறுதிச் சுற்றும் , பின்பு அரை இறுதிப் போட்டியும் நடந்தன.  அரை இறுதியில் ஸ்பெயின் மற்றும இத்தாலி அணிகள் வெற்றி பெற்று இறு திச் சுற்றுக்கு முன்னேறின. இதன் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது.  இந்த இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நடப்பு சாம்பி யனான ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 4- 0 என்ற கோல் கணக்கி ல் இத்தாலி அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்ட்தை வென்றது. அந்த அணி ஒட்டு மொத்தத்தில் 3-வது முறையாக பட்டம் வென்றுள்ளது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஷவி ஹெர்னாண்டஸ், பேப்ரிக்ஸ் , இனஸ்டா ஆகியோர் சிற ப்பாக ஆடி இத்தாலி அணிக்கு நெருக் கடி கொடுத்தனர். இதன் பயனாக ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை போட்டது. பேப்ரிக்ஸ் அடித் த பந்தை டேவிட் சில்வா தலையால் முட்டி அருமையாக கோல் போட்டார். கோல் விழுந்த அதிர்ச்சியில் இத்தாலி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினா ர்கள். ஆனால் அவர்களால் முன்னேறி விளையாட முடியவில்லை.

சில வாய்ப்புகளை ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலாஸ் தடுத்தார். இத்தாலி அணியின் சிறந்த வீரரான பலோடெ ல்லியும் வாய்ப்புகளை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது. 

முதல் பாதி ஆட்டம் முடிய 4 நிமிடங் கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 2-வது கோலை போட்டு இத்தாலி அணிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது. 

ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஷவி ஹெர்னாண்டஸ் தட்டித் கொடுத்த பந் தை ஜோர்டி ஆல்பா கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் முன் னிலை பெற்று இருந்தது. 

2-வது பாதி ஆட்டத்திலேயேயும் ஸ்பெ யின் கையே ஓங்கி இருந்தது.இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக ஆடிய இத்தாலி அணியின் ஆட்டம் இந்த சுற் றில் எடுபடவில்லை. 

அதோடு அந்த அணியின் பின் களமும் பலவீனமாக இருந்தது. அரை இறுதியி ல் ஜெர்மனியை வீழ்த்திய இத்தாலியா ல் ஸ்பெயினின் வேகமான ஆட்டத்தி ற்கு முன்பு சரியாக விளையாட முடி யாமல் திணறினார்கள். 

ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஸ்பெ யின் அணி 3-வது கோலை அடித்தது. பேப்ரிக்சுக்கு பதிலாக மாற்று வீரராக அனுப்பப்பட்ட மூத்த வீரர் டொரஸ் இந்த கோலை அடித்தார். 

ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 4-வது கோ லை அடித்தது. டொரஸ் பாஸ் செய்த பந்தை இனஸ்டாவுக்கு பதிலாக மாற் று வீரராக இறங்கிய ஜியன் மதா இந்த கோலை அடித்தார். 

இத்தாலி அணியால் ஆட்டத்தின் இறு திவரை ஒரு கோல் கூட போட முடி யாமல் போனது. முடிவில் ஸ்பெயின் 4- 0 என்ற கோல் கணக்கில் அபார வெ ற்றி பெற்று யூரோ கோப்பையை கைப் பற்றியது. 

ஸ்பெயின் அணி 3-வது முறையாக யூரோ கோப்பையை வென்று புதிய வர லாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனியின் சாதனையை சமன் செய்து ள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்