முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜோகோவிக், அசரென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 4 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. - 4 -  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிக்கும், மகளிர் பிரிவில் அசரென்காவும் வெற்றி பெற்று கால் இறு திக்கு தகுதி பெற்றனர். இந்த வருடத்தின் 3-வது கிராண்ட் ஸ்லாம் போட்டி இங்கிலாந்து நாட்டி ன் தலைநகரான லண்டன் அருகே கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது.  இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்த ப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.  கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதி ல் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெலிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.  ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக் சக நாட்டு வீரரை சந்தித் தார்.  இதில் செர்பிய முன்னணி வீரரான ஜோகோவிக் அபாரமாக ஆடி, 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டிரோக் கியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்தப் போட்டியில் முதல் நிலை வீர ரான ஜோகோவிக் எளிதான வெற்றி யைப் பெற்றார். கால் இறுதியில் அவர் பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு அல்லது ஜெர்ம னி வீரர் புளோரினை சந்திப்பார் . மகளிருக்கான 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் முன்னணி வீராங் கனையான அசரென்காவும், செர்பிய வீராங்கனை இவானோவிக்கும் மோதி னர். 

இதில் உலகின் 2 -ம் நிலை வீராங்கனையான அசரென்கா சிறப்பாக ஆடி, 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தமிராவைச் சந்திக்கிறார். மற்றொரு ஆட்டம் ஒன்றில் செக். குடி யரசு வீராங்கனை குவிட்டோவாவும், இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா

வும் மோதினர். இதில் செக். வீராங்க னை 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

செக். வீராங்கனை குவிட்டோவா கா ல் இறுதிச் சுற்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம் சை சந்திக்கிறார். நேற்றைய பெரும் பாலான ஆட்டங்கள் மழையால் பாதி க்கப்பட்டன. 

-------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்