முக்கிய செய்திகள்

சோனி எரிக்சன் டென்னிஸ் - இறுதிச்சுற்றில் நடால்-ஜோகோவிக்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
nadal

 

மியாமி, ஏப். 3 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சோனி எரிக்சன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரேப ல் நடாலும், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக்கும் பட்டத்திற்காக பலப்பரிட்சை நடத்த இருக்கின்றனர். 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான சோனி எரிக்சன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள முக் கிய நகரமான மியாமியில் நடைபெற்று வருகிறது. 

கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த இந்தப் போட்டி தற் போது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இதில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

மொத்தம் 3.5 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாகக் கொண்ட இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும். இந்தப் போ   ட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. இந்தப் போட்டி யை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.  

செர்பிய முன்னணி வீரரான ஜோகோவிக் சமீப காலத்தில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். அவரது வெற்றிப் பயணம் இந்தப் போட்டியிலும் தொடர்கிறது. இறுதிச் சுற்றில் அவர் நடாலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார். 

முன்னதாக நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் செர்பியாவின் நம்பிக் கை நட்சத்திரமான ஜோகோவிக், அமெரிக்க வீரர் மர்டி பிஷ்சை சந்தி த்தார். இதில் அவர் 6 -3, 6 - 1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இந்த வருடம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 4 -வது போட்டி இதுவாகும். 

மற்றொரு அரை இறுதிச் சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான ரேபல் நடா லும், ஸ்விஸ் வீரர் ரோஜர் பெடரரும் பலப்பரிட்சை நடத்தினர். இந்த ஆட்டம் 2 செட்டில் முடிவுக்கு வந்தது. 

இந்தப் போட்டியில் ஸ்பெயின் வீரரான நடால் துவக்கம் முதலே அபாரமாக ஆடி 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் பெடரரை தோற்கடி த்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் இதுவரை 16 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவராவார். அவர் தற்போது ஆடவருகக்கான ஒற்றையர் தரவரிசைப் பட்டியலில் 3 -வது இடத்தில் இருக்கிறார். 

ஸ்பெயினின் இளம் வீரரான ரேபல் நடால் இதுவரை மியாமியில் பட்டம் வென்றது கிடையாது. அவர் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். பெடரருக்கு எதிரான அரை இறுதியில் அவர் சர்வீஸ் போட திணறினார். இருந்த போதிலும், பெடரர் செய்த தவறு களை தனக்கு சாதகமாக்கி வெற்றி பெற்றார். 

செர்பிய வீரரான ஜோகோவிக் இதுவரை தொடர்ந்து 23 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். அவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், துபாய் ஓபன் மற்றும் இன்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் 1000 ஆகிய போட்டிகளில் பட்டம் வென்று இருக்கிறார். தற்போது மியாமி பட்ட த்திற்கும் குறி வைத்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: