முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர் நீதிமன்ற விழா: ஜனாதிபதி பங்கேற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - சென்னை உயர் நீதிமன்றத்தின் 150​வது ஆண்டு நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:-

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 8-​ம் தேதி உயர் நீதிமன்றத்தின் 150​வது ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். அதேபோல் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் நேற்று அனுப்பி உள்ளோம். மாநில ஆளுநர் ரோசய்யா, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று மோகனகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்