குத்துச்சண்டை: காலிறுதியில் தேவேந்திர சிங் தோல்வி

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 10 - லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் ஆடவருக்கான காலிறுதி ப் போட்டியில் இந்திய வீரர் தேவேந்தி ர சிங் லைஸ்ராம் தோல்வி அடைந் தார். 30 -வது ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தரப்பில் 6 வீரர்களும், ஒரே ஒரு வீராங்கனையான மேரிகோமும் பங் கேற்றனர். இதில் மேரிகோம் அரை இறதிவரை முன்னேறி வெண்கலம் வென்றார். 

மற்ற வீரர்கள் காலிறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்திய வீரர்கள் ஒரு பதக்கம் கூட பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பு கின்றனர். 

ஆனால் இந்த முறை தான் ஒலிம்பிக்கி ல் இந்திய அணி தரப்பில், 6 குத்துச் சண்டை வீரர்கள் முக்கிய போட்டிக்கு தகு தி பெற்று இருந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது. 

இது குறித்து இந்திய குத்துச் சண்டை பயிற்சியாளரான குர்பக்ஸ் சிங்கிடம் கேட்ட போது, ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கம் பெறாத போதிலும், சிறப்பாக சண்டையிட்டனர் என்றார் அவர். 

ஆடவருக்கான குத்துச் சண்டைப் போ   ட்டியில் இந்திய வீரர் தேவேந்திர சிங் 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றா ர். அவர் காலிறுதியில் அயர்லாந்து வீர ர் பர்னெசுடன் மோதினார். 

இதில் அயர்லாந்து வீரர் 23 - 18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்தத் தோல்வியால் சிங் அரை இறுதி வாய்ப்பை இழந்தார். 

முன்னதாக நடந்த முதல் சுற்றில் சிங் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார். ஆனால் 2 - வது சுற் றில் சிங் தவறுகள் செய்ததால் நடுவர் கள் எச்சரித்தனர். இதனால் அயர்லாந்து வீரர் பார்னசுக்கு கூடுதல் புள்ளிகள் வழ ங்கப்பட்டது. 

2-வது சுற்று முடிவில் பார்னஸ் 17 புள் ளிகள் பெற்று முன்னிலை வகித்தார். கடைசி சுற்றில் சிங் போராடியும் பல ன் கிடைக்கவில்லை. 

இந்த சுற்றில் நடுவர்கள் சரியாக புள்ளி கள் வழங்கவில்லை என்றும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சிங் சரியாக பஞ்ச் கொடுத்தும் புள்ளிகள் வழங்கப்ப டவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: