ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்போம் - பாண்டிங்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, ஆக. - 15 - ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திற்கு பதி லடி கொடுப்போம் என்று ஆஸ்திரேலி ய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்து இருக்கிறார்.  இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொ டரில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.  ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னியில் நிருபர்களைச் சந்தித்த ரிக்கி அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கை யில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் மாத ம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் பங் கேற்பதன் மூலம் அதிக டெஸ்டில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் என்ற புதி ய சாதனையை அவர் படைப்பார். இதற்கு முன்னதாக ஸ்டீவ் வாஹ் இந்த சாதனையை ஏற்படுத்தி இருந்தார். இலங்கைக்கு எதிரான தொடர் அடுத்து நடக்க இருந்த போதிலும், 2013 -ம் ஆண்டு இங்கிலாந்து தொடர் மீதே பாண்டிங்கின் கண் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வரு கிறார். ரிக்கி பாண்டிங் இதுவரை 165 டெஸ்டி ல் விளையாடி இருக்கிறார். இது முன் னாள் கேப்டனான ஸ்டீவ் வாஹ்கின் சாதனையை விட 3 குறைவானதாகும். இலங்கை தொடரை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் நடக்க இருக்கிறது. இந்த இரண்டு தொ டருக்கும் பாண்டிங் ஆயத்தமாகி வரு கிறார். இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொ டரை ஆஸ்திரேலிய அணி இழந்தது. முக்கியமாக ஓவலில் நடைபெற்ற டெ ஸ்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்தி ற்கு திருப்புமுனையாக அமைந்தது. இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொ  டரை இழந்தது மிகுந்த வருத்தம் அளி த்ததாகவும், எனவே அந்த அணிக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியாவின் பெயரை மீண்டும் நிலைநாட்டுவோம் என்றும் பாண்டிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: