முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் நல்லபாடம் கற்றார்கள்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. - 16 - லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் நல்ல பாடம் கற்றுக் கொண்டனர் என்று பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங்சந்து தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தத் தோல்வி மூலம் அவர் கள் தங்களது தவறுகளை உணர்ந்து கொண்டனர் என்றும் மேலும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கம் அவர்களிடம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அரியானாவைச் சேர்ந்த விஜேந்தர் சிங் ஆடவர் குத்துச்சண்டைப் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். எனவே லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலிறுதியை தாண்டவில் லை. லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் எல். தேவேந்திர சிங், ஷிவா தாபா, ஜெய்பகவான், மனோஜ் குமார், விகாஸ் கிரிஷன், விஜேந்தர் சிங், சுமித் சங்வான், ஆகிய 7 வீரர்கள் பங்கேற்றனர்.  ஆனால் இவர்கள் கால் இறுதியை தாண்டவில்லை. சில போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பு இந்திய வீரர்களுக்கு சாதகமாக இல்லை. லண்டன் தோல்வி இந்திய வீரர் களிடம் வெற்றி வேட்கையை ஏற்படுத்தி உள்ளது என்று சந்து கூறினார். இந்தத் தோல்வி அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வீரர்கள் மோசமாக பங்கேற்கவில்லை. எனவே அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.  நாடு திரும்பியதும் அவர்கள் பயிற்சியை துவக்கி உள்ளனர்  என்றும் சந்து தெரிவித்தார். ஒலிம்பிக் தோல்வியால் இந்திய வீரர்கள் சோர்வடைந்து விடவில்லை. அவர்களிடம் மேலும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டுஉள்ளது. இதற்காக அவர்கள் கடினமாக பயிற்சி எடுக்க உள்ளனர். அவர்களது உணர்வில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்றும் சந்து தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய குத்துச் சண்டை அணியின் பயிற்சியாளராக குர்பக்ஸ் சிங் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பங்களிப்பு குறித்து கேட்ட போது, இந்திய வீரர்கள் பதக்கம் பெறாவிட்டாலும் சிறப்பாக சண்டையிட்டார்கள் என்றார் அவர். பெய்ஜிங் போட்டி போன்று லண்டனில் பதக்கம் பெற முயன்றோம். ஆனால் அது முடியாமல் போயிற்று. ஆனால் இந்த மெகா போட்டியில் இந்திய வீரர்கள் நன்கு சண்டையிட்டார்கள் என்றும் சந்துதெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்