சின்சினாட்டி: பூபதி-பொபண்ணா ஜோடிக்கு ரன்னர்ஸ் அப்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சின்சினாட்டி, ஆக. 21 -  அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் ரோகன் பொபண்ணா ஜோடி ரன்னர்ஸ் அப் பட்டம் கைப்ப ற்றியது. இதன் இறுதிச் சுற்றில் சுவீடனைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த டெக்காவு இணை அபாரமாக ஆடி வெற்றி பெற்று சாம்பியன் பட்ட ம் வென்றது.

ஆடவருக்கான ஏ.டி.பி. மற்றும் மகளி ருக்கான டபிள்யு. டி. ஏ. ஆகிய இரண்டு சங்கமும் இணைந்து சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியை நடத்தி வருகி ன்றன. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித் தனர். கடந்த ஒரு வார காலமாக நடந்த இந்தப் போட்டி நேற்றுடன் முடிந்தது. இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 2,825, 280 அமெரிக்க டாலர்கள் ஆகும். கடின களத்தில் நடந்த இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும். 

மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

சின்சினாட்டி போட்டியின் இரட்டைய ர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் இந்திய மற்றும் சுவீடன் மற்றும் ருமே னிய ஜோடிகள் மோதின. 

பரபரப்பாக நடந்த இந்த இறுதிச் சுற் றில் இந்தியாவின் மகேஷ் மற்றும் ரோ கன் ஜோடி போராடி தோல்வி அடை   ந்தது. இதில் எதிரணி சிறப்பாக ஆடி யது. 

இறுதியில் ராபர்ட் லிண்ட்செட் மற்றும் ஹொரியா டெக்காவு இணை 6- 4, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் மகேஷ் பூப தி மற்றும் ரோகன் பொபண்ணா ஜோ டியை வீழ்த்தியது. 

இந்தப் போட்டி சுமார் 1 மணி மற்றும் 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த ப் போட்டியில் வெற்றி பெற்ற சுவீடன் மற்றும் ருமேனிய இணை 4-ம் நிலை ஜோடியாகும். இந்திய ஜோடி 6-ம் நிலை ஜோடியாகும். 

இந்த சீசனில் மகேஷ் மற்றும் ரோகன் பங்கேற்கும் இரண்டாவது இறுதிச் சுற் று இதுவாகும். இதற்கு முன்னதாக இந்த ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் பட்டம் வென்றது. 

முன்னதாக நடைபெற்ற ஆடவருக் கான இரட்டையர் பிரிவின் 2-வது சுற் றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் செக் குடியரசின் ரேடக் ஸ்டீ பானிக் ஜோடி தோல்வி அடைந்தது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: