யு-19 கிரிக்கெட்: பாக்,கை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டவுன்ஸ்வில்லே (ஆஸ்திரேலியா), ஆக. 21 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் உலகக் கோப்பை யு - 19 கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் இந்திய இளைஞர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித் தது. கடைசி விக்கெட் ஜோடி பொறு மையாக ஆடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. 

இளைஞர்களுக்கான யு - 19 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் கடந்த 1 வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்த இளைஞர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தா ன், நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவு கள் அணி , தென் ஆப்பிரிக்கா, இலங்கை , இங்கிலாந்து உட்பட முக்கிய நாடுகள் பங்கேற்றன. 

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக நடந்து வரும் இந்தப் போட்டியில் பங் கேற்று வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது திற மையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்தனர். 

இந்தப் போட்டி தற்போது அரை இறு தியை எட்டி உள்ளது. விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். 

இளைஞர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்த வரை பாகிஸ்தான் அணி பல முறை இந்திய அணியை தோற்கடித்து உள்ளது.ஆனால் இந்தப் போட்டியில் இந்திய இளைஞர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ் தானை வீழ்த்தி தங்களது வஞ்சத்தை தீர்த்துக் கொண்டனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். 

இறுதிக் கட்டத்தில் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் பொறுமையாக வும், கவனமாகவும் ஆடி அணியை வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக் கது. உலகக் கோப்பை இளைஞர் கிரிக்கெட்போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள டவு ன்ஸ்வில்லே நகரில் நடைபெற்றது. 

இதில் இந்திய இளைஞர் அணியும், பா கிஸ்தான் இளைஞர் அணியும் பலப் பரிட்சை நடத்தின. இந்தப் போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்னில் சுருண்டது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்னை எடுத் து 1 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில், பாபா அபராஜித் (51 ரன், 97 பந் து, 3 பவுண்டரி), விஜய் ஜால் (36) இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 

இந்திய அணி ஒரு கட்டத்தில் முதல் 5 ஓவரில் 8 ரன்னிற்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. அப்போது, பாபா மற்றும் விஜய் இரு வரும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  கடந்த 2006 மற்றும் 2010 -ம் ஆண்டு இளைஞர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்க டித்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்திய இளைஞர்கள் பதிலடிகொடுத்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: