முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் வழக்கு: மன்னிப்பு கேட்டது மத்திய அரசு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக. 22 -​ கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியதை எதிர்த்து என்ஜினீயர் சுந்தரராமன் சென்னை ஐகோர்ட்டில் 2 புதிய மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வக்கீல் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். அப்போது கடந்த முறை விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். ஐகோர்ட்டு மீது மத்திய அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது என்றார். அதை தொடர்ந்து நீதிபதிகள் குறுக்கிட்டு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது, எல்லா தொழிற்சாலைகளை போன்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் வெப்ப நீர் அக்னி போன்று இருக்கும். பொதுவாக 38 டிகிரி அளவு நீரைதான் கடலில் கலக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் 45 டிகிரி வரையிலான நீரை கடலுக்குள் அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். அது எப்படி சாத்தியமாகும். இதனால் கடல் வாழ் உரியினங்கள் பாதிக்கப்படாதா? கடல்வாழ் ஆதாரம் பாதிக்கப்படாதா? என கேள்வி எழுப்பினர். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு, கடலில் கலக்கும் போது அதன் வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வேண்டும். எனவே தற்போதைய நிபந்தனையை திருத்தி அமைத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 23-​ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்