முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஜாராவால் கெளரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஆக. 24 - நியூசிலாந்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னை எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் இன்னிங்சில் தேஜேஸ்வர் பூஜாரா சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இது அவருக்கு டெஸ்டில் முதலாவது சதமாகும். 

தவிர, அவர் இதுவரை  4 டெஸ்டில்  பங்கேற்று இருக்கிறார். இதில் ஒரு அரை சதமும், ஒரு சதமும் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சதம் அடித்த அவர் இறுதிவரை ஆட்ட ம் இழக்காமல் இருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக சேவாக், காம்பீர் , கோக்லி மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் ஆடினர். கோக்லி அரை சதம் அடித்தார். 

கேப்டன் ரோஸ் டெய்லர் தலைமையி லான நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மையத்தில் நேற்று துவங்கியது. இதில் இந்திய அணி டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்த டெஸ்டில் இந்திய அணி ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் . லக்ஷ்மண் ஆகிய மூத்த வீரர்கள் இல்லாமல் களம் இறங்கியது.எனவே இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால் பூஜாரா மற்றும் கோக்லி இருவரது ஆட்டத்தால் இந்திய அணி கெளரவமான நிலைக்கு சென்று உள்ளது. 

முன்னதாக சேவாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 49 -க்கு சென்ற போது, காம்பீர் ஆட்டம் இழந்தார். 

அவர் 36 பந்தில் 22 ரன்னை எடுத்த நிலையில், போல்ட் வீசிய பந்தில் கீப்பர் வான்விக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 4 பவுண்டரி அடித்தார். இதனைத் தொடர்ந்து பூஜாரா களம் இறங்கினார். அவர் மே.இ.தீவுக்கு எதிரான தொடரின் போது , சிறப்பாக ஆடியதால் இந்த டெஸ்டில் அவர் 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார். 

பூஜாரா அபாரமாக பேட்டிங் செய்து அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றினார். டிராவிட் இல்லாத குறையை அவர் பூர்த்தி செய்து வருகிறார். பூஜாராவும், சேவாக்கும் இணைந்து கவனமாகவும், நிதானமாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 10.4 ஓவரில் 50 ரன்னை எட்டியது. நன்றாக பேட்டிங் செய்து கொண்டு இருந்த சேவாக் 50 ரன்னை நெருங்கினார். ஆனால் அவரால் அரை சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. 

சேவாக் 41 பந்தில் 47 ரன்னை எடுத்த நிலையில், பிரேஸ்வெல் வீசிய பந்தை அடித்த போது, அது கேட்சாக மாறி செகன்ட் ஸ்லிப்பில்  இருந்த குப்டிலிடம் சிக்கியது . 

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 77 ரன்னிற்கு 2 விக்கெட் இழப்பு என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கர் களம் இறங்கினார். மதிய உணவு இடைவேளையின் போ

து, இந்திய அணியின் ஸ்கோர் 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன் என்ற நிலையில் இருந்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்தியா 25.3 ஓவரில் 100 ரன்னை எட்டியது. ஆனால் மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சச்சின் 62 பந்தில் 19 ரன் எடுத்த நிலையில் போல்ட் வீசிய பந்தில் கிளீன் போல்ட்டானார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 125 என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து விராட் கோக்லி வந்தார். ஒருமுனையில் பூஜாரா நிலைத்து ஆடினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினர். இந்தியாவின் ஸ்கோர் 250 -க்கு சென்ற போது, கோக்லி ஆட்டம் இழந்தார். அவர் 107 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். பின்பு களம் இறங்கிய ரெய்னாவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அவர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் தோனி வந்தார். 

இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது பூஜாரா 226 பந்தில்  119 ரன்னுடனும் (15 பவுண்டரி, 1 சிக்சர்)தோனி  37 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  பூஜாரா 119 பந்தில் 50 ரன்னையும், 169 பந்தில் 100 ரன்னையும் எட்டினார். 

முன்னதாக காம்பீர் மற்றும் சேவாக் இருவரும் நன்கு ஆடிக் கொண்டிருந்த போதிலும், தேவையில்லாத பந்துகளை தொட்டு ஆட்டம் இழந்தனர். அதே போல டெண்டுல்கர் மற்றும் ரெய்னாவும் அவுட்டானார்கள். 

நியூசிலாந்து அணி தரப்பில்,போல்ட் 63 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்டின், பிரேஸ்வெல் மற்றும் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago