ஐதராபாத் டெஸ்ட்: நியூசிலாந்து அணி பாலோ ஆன் ஆனது

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஆக. 26 - இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முத லாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியி ல் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சி ல் 159 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் ஆனது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி நியூசி.யின் விக்கெட்டை சூறையாடினர். அஸ்வின் மற்றும் ஓஜா இரு வரும் இணைந்து 9 விக்கெட் எடுத்தனர். யாதவ் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினார். 

பின்பு தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழ ப்பிற்கு 41 ரன்னை எடுத்து இருந்தது. கடைசி கட்டத்தில், இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது டெ ஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ரா ஜீவ் காந்தி சர்வதேச மையத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய  இந்திய அணி நன்கு பேட்டிங் செய்து ரன்னைக் குவித்தது. இந்திய அணி இறு தியில், 134.3 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 438 ரன்னை எடுத் தது. 

இந்திய அணியின் இன்னிங்சில் புஜா ரா 306 பந்தில் 159 ரன்னை எடுத்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் தோனி 147 பந்தில் 73 ரன்னையும், விராட் கோக்லி 107 பந்தில் 58 ரன்னையும், சேவாக் 41 பந்தில் 47 ரன்னையும், அஸ்வின் 54 பந்தி ல் 37 ரன்னையும், காம்பீர் 19 ரன்னையு ம், டெண்டுல்கர் 19 ரன்னையும் எடுத்த னர்.

பின்பு களம் இறங்கிய நியூசிலாந்து அணி இந்திய சுழற் பந்து வீச்சை சமா ளிக்க முடியாமல் திணறியது. இறுதியி ல் அந்த அணி 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்னை மட்டும் எடுத்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. பிராங்ளின் அதிகபட்சமாக, 122 பந்தில் 43 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர்  அடக்கம். தவிர, வில்லியம்சன் 92 பந்தில் 32 ரன்னையு ம், மெக்குல்லம் 22 ரன்னையும், பிரே ஸ்வெல் 17 ரன்னையும், பிளைன் 16 ரன் னையும், போல்ட் 15 ரன்னையும் எடுத் தனர். 

இந்திய அணி சார்பில் அஸ்வின் 31 ரன் னை விட்டுக் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். ஓஜா 44 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர  உமேஷ் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். 

நியூசி. அணி  159 ரன்னில் சுருண்டதால் பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து ஆடி ய அந்த அணி 3 -ம் நாள் ஆட்ட நேர முடிவில், 18 ஓவரில் 1 விக்கெட் இழப் பிற்கு 41 ரன்னை எடுத்து இருந்தது. 

துவக்க வீரர் மெக்குல்லம் 59 பந்தில் 16 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். வில்லியம்சன் 3 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். 

முன்னதாக குப்டில் 16 ரன் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந் தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: