முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுமாம்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஏப்.- 8 - மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து இம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் முக்கிய ஆலோசனை நடத்தினர். நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி  மன்றங்களுக்கான தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து இம்மாநிலத்தில்  தங்களது ஆதிக்கத்தை செலுத்த இந்த முறை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்றும்  தனித்தே போட்டியிடுவது என்றும் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே தெரிவித்தார்.

ஒரு காலத்தில் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்கள் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 82 இடங்கள் மட்டுமே  உள்ளன என்றும் எனவே கட்சியை பலப்படுத்த தனித்து போட்டியிடலாமா என்பது குறித்து  விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஒய்.பி. சவான் மையத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, முதல்வர் பிரிதிவி ராஜ் சவுகான், முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago