எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.12 - ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் மூலம் உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்திய கருணாநிதி ஆட்சியை அகற்ற அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அமைதி புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 13-ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த தேர்தல்களில் வெற்றிபெற அயராது உழைத்தோம். நானும் இரவும், பகலும் பாராமல் நாட்டு மக்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். எனது நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்களும், கூட்டணியினரும் ஆங்காங்கே சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூட தங்கள் எழுச்சியைக் காட்டினர். மக்கள் மனப்பூர்வமாக நம்மை ஏற்றுக் கொண்டிருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு வரவாற்றிலேயே என்றும் இல்லாத அளவிற்கு ஒரு குடும்பத்தின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டுள்ளது. மக்களாட்சியை பயன்படுத்தி முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, மக்களை வாழ வைக்கவில்லை. தன் குடும்பம் உயரவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றியதன் விளைவாக தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையே கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டற்குள் வந்து விட்டது.
செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், சினிமாத்துறை, நிலம் வாங்கி வீடு கட்டுதல் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் கருணாநிதி குடும்பம் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. மக்களின் உரிமைகள் கருணாநிதி குடும்பத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்பதே இந்தத் தேர்தலில் நமது தலையாய கடமையாகும்.
மக்களை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், ஆள் கடத்தில், கொலை, கற்பழிப்பு போன்ற பெருகி வரும குற்றங்கள் கருணாநிதி ஆட்சியின் இலக்கணமாகி விட்டது. மத்திய அரசில் பங்கு பெற்று கருணாநிதி குடும்பத்தினர் ஈடுபட்ட ஒன்றே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஊழல், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்துவிட்டது.
தமிழ்நாட்டின் பல துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி, தமிழ்நாட்டுக்கே அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ள கருணாநிதி ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலம் அகற்றுவதே நாம் பிறந்த தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய தலைசிறந்த பணியாகும். இதற்கான வாய்ப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கிடவே இதுரரையில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க. உட்பட இதர எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது.
நாடு முதலில், கட்சி பிறகு என்றார் அறிஞர் அண்ணா. ஆகவே நாட்டு நலன் கருதி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிற ஒன்றாகும். சகல துறைகளிலும் வீழ்ந்து விட்ட தமிழ்நாட்டை தூக்கி நிறுத்துகின்ற பெரு முயற்சியாகும்.
மக்களின் உரிமைகளை மீட்கவும், தமிழ்நாட்டைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் அ.தி.மு.க..வோடு நாம் கூட்டணி வைக்க முயற்சித்தபோது, எப்படியும் இந்தக் கூட்டணி வரவிடக்கூடாது என்று கருணாநிதியும், அவரது சகாக்களும், காவல்துறை ஒற்றர் பிரிவும் சதிவலை தீட்டினர். ஆனால் அதை முறியடித்து வெற்றிகரமான கூட்டணியை உருக்கினோம். ஆகவே தமிழ்நாட்டு மக்கள் இதை வெற்றிக் கூட்டணி என்று அழைப்பதில் வியப்பில்லை.
எனினும் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றங்கள் அரசாட்சியில் உள்ளனர். பணபலம், பலாத்திரம், அதிகார துஷ்பிரயோகம் என்று அனைத்தையும் பயன்படுத்தினர். குறிப்பாக தி.மு.க.வினர் பண மழை பொழிய துவங்கி விட்டனர். ஓரளவிற்காவது நியாயமாக தேர்தல்கள் நடத்த வேண்டுமென்று பாடுபடுகின்ற தேர்தல் கமிஷனையே முதலமைச்சர் கருணாநிதி மறைமுகமாக மிரட்டுகிறார் என்றால், சாதாரணமான பாமர மக்கள், இவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும்? இருப்பினும் ஆர்வம் மிக்க இளைஞர்களும், குடும்பத்தை நடத்த தவிக்கின்ற தாய்மார்களும் அரசியல் சீரழிவைக் கண்டு வேதனைப்படுகின்ற பெரியோர்களும், இன்றைய ஆட்சியில் மாற்றம் தேவை என்பதை உணருகின்றனர்.
இதன் விளைவாகவே தமிழ்நாட்டில் இன்று கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் சக்தி திரண்டுள்ளது. இந்த மக்கள் சக்தியை வாக்குகளாக மாற்றி மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருவது கட்சித் தோழர்களின் கையில் உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை பணத்தைக் கொண்டு வாக்குகளை திருட முயற்சிக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து பாமர மக்களை காப்பாற்றவும், வாக்காளர்களை இடைவிடாது அணுகவும், வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வைப்பதும் கழகத் தோழர்களின் கடமையாகும்.
எனது உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களாகிய உங்களை இந்தத் தேர்தல் மூலம் ஒரு புதிய வரலாறு படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் நமது அணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகள் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றியாளர்களாக ஆக்கித் தருவது மக்கள் கையில் உள்ளது. மக்களோ மாற்றத்தைக் காண விரும்புகின்றனர். அந்த மாற்றத்திற்கு வடிவம் தர வேண்டியது நமது தோழர்கள் கையில் உள்ளது. ஆகவே மக்களை இடைவிடாது அணுகி வாக்குப்பதிவு செய்யும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் வாக்குச் சீட்டுகள் மூலம் ஒரு அமைதிப் புரட்சியை உருவாக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
13 Sep 2025சென்னை : திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.