முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தல்: வெல்லப் போவது ஒபாமாவா - ராம்னியா?

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக். 22 - அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. சிலர் ஒபாமா மீண்டும் ஜெயிப்பார் என்கிறார்கள். இன்னும் சிலர் ராம்னிதான் ஜெயிப்பார் என்கிறார்கள். அமெரிக்காவில் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஒபாமா - ராம்னி முதல் விவாதம் முடிந்த உடன் ராம்னிதான் ஜெயிப்பார், அவருக்கு 7 சதவீதம் கூடுதல் ஆதரவு என்ற ரீதியில் கணிப்புகளை வெளியிட்டவர்கள், இரண்டாவது விவாதத்துக்குப் பிறகு கப் சிப்பென்று ஆகிவிட்டார்கள்.

குறிப்பாக காலப் நிறுவனம் தன் கணிப்பில், ராம்னிக்கு நாடு முழுவதும் 51 சதவீத ஆதரவும், ஒபாமாவுக்கு 45 சதவீதம் மட்டுமே என்றும் கலக்கம் உண்டாக்கியுள்ளன. ஆனால் என்.பி.சி கருத்துக் கணிப்பில், தீவிர போட்டிக் களமான ஐயோவா, மற்றும் விஸ்கான்ஸின் மாநிலங்களில் ஒபாமாவின் வெற்றி உறுதியாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளன.

மேலும் சி.என்.என் கருத்துக்கணிப்பு, இன்னொரு முக்கிய மாநிலமான டிப்ளோரிடாவில் ஒபாமா 48, ராம்னி 49 சதவீதம் என கடுமையான போட்டி நிலவுவதைக் குறிப்பிட்டுள்ளது.

இப்படி பல்வேறு விதமான கருத்துக் கணிப்புகள் இரு கட்சியினரையும், மக்களையும் குழப்புவது போல் இருந்தாலும், மாநில வாரியான முடிவுகளே அதிபர் தேர்தலின் வெற்றியை நிச்சயிக்கின்றன.

அந்த வகையில் ஒபாமாவுக்கு ஏற்கனவே 237 வாக்குகள் உறுதியாக இருக்கின்றன. கூடுதலாக 33 வாக்குகள் மட்டுமே தேவை. ஒஹயோ 18, விஸ்கான்ஸின் 10, ஐயோவா 6 என மூன்று மாநிலங்கள் சாதகமான நிலையில் ஒபாமாவின் வெற்றி உறுதியாகிறது. இந்த மாநிலங்களில் ஒபாமாவின் வெற்றியை குலைக்கும் வகையில் ராம்னியின் கட்சியினரும், ஆதரவாளர்களும் பெருமளவில் பணத்தை வாரியிறைத்து, எதிர்மறை விளம்பரங்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதிபர் ஒபாமா, குறிப்பாக பெண் வாக்காளர்களை அவர் ரொம்பவே நம்புகிறார். இதுவரை எந்த அதிபரும் தராத, செய்யாத பல விஷயங்களை பெண்களுக்காக அவர் செய்திருப்பதை தன் பிரச்சாரத்தில் சொல்லி வருகிறார்.

இன்னொரு பக்கம் இளைஞர்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விஷயத்தில் அமெரிக்க இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையைத் தந்து வருகிறார் ஒபாமா என்றே கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்