முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: பயணிகள் தப்பினர்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு , நவ. 25- கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து  ஈரோடு, கரூர்,திருச்சி வழியாக கரைக்கால் வரை செல்லும் டீக்கார்டன் விரைவு ரயில் வெள்ளியன்று(23-11-12) இரவு  புறப்பட்டு  நேற்று அதிகாலை(சனி)5.00 மணிக்கு  ஈரோடு வந்தது .பின் ஈரோட்டில் புறப்பட்ட  ரயில் கொடுமுடி ரயில் நிலையத்திற்கு காலை 5.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போதுரயில் பெட்டியின் கீழே உள்ள சக்கரத்தின் ரப்பர் புஷ்சில் இருந்து தீடிர் என கரும்புகை வந்துது தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.  அப்போது பிளாட்பாரத்தில்  நடைபயிற்சிமேற்கொண்டிருந்தவர்கள்  ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ரயில் வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு  தீயணைப்பு கருவியை கொண்டு தீயைபரவவிடாமல் அணைத்தனர்.ரயிலில் தீபிடித்தது தெரிந்துபயணிகள் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர்கள். தீ அணைக்கப்பட்டது கண்டு நிம்மதிபெருமூச்சுவிட்டனர்.  மேலும் பயணிகள் கூறுகையில் நின்ற ரயிலில் தீவிபத்து  ஏற்பட்டு அதுவும் விரைந்து ஊழியர்களால் கண்டு பிடிக்கப்பட்டு அணைக்கப்பட்டதால்  பெரிய தீவிபத்து தவீர்க்கப்பட்டுள்ளது.  மேலும் ஓடும் ரயிலிலே, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தால்  மற்ற பெட்டிகளுக்கு ம் தீ பரவி பெரிய அளவு சேதம் ஏற்பட்டிருக்கும்.  ஆண்டவன் புண்ணியத்தால்  பெரிய விபத்திலிருந்து நாங்கள் தப்பியுள்ளோம் என்று பயணிகள் கூறினார்கள். தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து 20 நிமிடங்கள் கால தாமதமாக கொடுமுடி  ரயில் நிலையத்தில்  இருந்து  டீகார்டன் எக்ஸ்பிரஸ்  புறப்பட்டு சென்றது.இந்த தீ விபத்து  ரயில் சக்கரங்களின்  உராய்வின் வெப்பம் ஏற்பட்டு ரப்பர்புஷ்சில் தீபிடித்ததாக தெரிகிறது  இது குறித்து ரயில் வே அதிகாரிகள் விசாரித்து  வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்