முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் இன்றுதமிழ் முறைப்படி வித்யாபாலன் திருமணம் நடந்தது

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, டிச.- 15 - சில்க் ஸ்மிதா வேடத்தில் 'தி டர்ட்டி பிக்சர்' இந்தி படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யாபாலன். இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. 'பிரனீதா', 'பா', 'கஹானி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் வந்த 'உருமி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். வித்யாபாலனுக்கும் 'யு' டி.வி. தலைமை நிர்வாகி சித்தார்த்ராய் கnullருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதற்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதையடுத்து வித்யாபாலன் ​ சித்தார்த்ராய் கnullர் திருமணம் இன்று காலை மும்பையில் உள்ள சுப்பிரமன்யசாமி கோவிலில் நடந்தது. வித்யாபாலன் காஞ்சீபுரத்தில் இருந்து வாங்கிய பட்டுச்சேலை அணிந்து இருந்தார். மணமகன் பட்டு குர்தா அணிந்து இருந்தார். வித்யாபாலன் தமிழ் பெண் என்பதால், தமிழ் முறைப்படி திருமண சடங்குகள் நடந்தன. வித்யாபாலனுக்கு சித்தார்த் ராய்கnullர், தாலி கட்டினார். நடிகர்கள், நடிகைகள் பலர் நேரில் வாழ்த்தினர். வித்யாபாலன், சித்தார்த் ராய்கnullர் திருமண வரவேற்பு சென்னையில் நடக்கிறது. மும்பையிலும் திருமண வரவேற்பை நடத்த உள்ளனர். தேனிலவுக்காக கரீபியன் தீவுக்கு செல்கிறார்கள். மும்பை ஜூகு பகுதியில் சித்தார்த்ராய் கnullர் ரூ.14 கோடிக்கு புதிதாக ஆடம்பர பங்களா வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டில் இருவரும் தேனிலவு முடிந்து திரும்பியதும் குடியேறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!