முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.சி. புத்தகத்தில் ரஜினி வாழ்க்கை வரலாறு

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 20 - சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. 6 ம் வகுப்பு புத்தகத்தில் வேலையின் கண்ணியம் என்னும் பிரிவின் கீழ் வரும் பாடத்தில் பஸ் கண்டக்டரில் இருந்து சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. கண்டக்டராக வேலை செய்த காலத்தில் இருந்து கலையார்வத்தில் நண்பர்களின் தூண்டுதலால் சென்னைக்கு வந்து டைரக்டர் கே. பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடினமான உழைப்பில் சூப்பர் ஸ்டாராக ஆனது வரை அவரது வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மத்தியில் வாழ்க்கையில் லட்சிய வெறியும், கடின உழைப்பும் இருந்தால்தான் வாழ்க்கையில் எதிர்பார்த்த இடத்தை எட்டிப் பிடிக்கலாம் என்று உணர்வை ஊட்டிடும் வகையில் ரஜினி வாழ்க்கை வரலாறு இந்த புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!