முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி சென்னை வந்தார்: முதல்வர் வரவேற்பு

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.22 - சென்னை வந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கவர்னர் ரோய்யாவும், முதல்வர் ஜெயலலிதாயும் வரவேற்றனர். துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சென்னை கலாஷேத்ராவில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று பிற்பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வந்தார். தனி விமானத்தில் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானத்திலிருந்து இறங்கி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த துணை ஜனாதிபதியை தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாஆகிய இருவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மின்சார நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், பா.வளர்மதி தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, டி.ஜி.பி.ராமானுஜம் மற்றும் முப்படை தளபதிகள் அவரை வரவேற்றனர்.

ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட துணை ஜனாதிபதி அனைவரும் நன்றி தெரிவித்தார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

கவர்னர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து துணை ஜனாபதி ஹமீது அன்சாரி நேற்று மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் கவர்னர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.

இன்று காலை 10.30 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். ஹமீது அன்சாரி 2-வது முறையாக துணை ஜனாபதியாக தேர்வு ஆன பிறகு சென்னைக்கு வருவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் வழியிலும் மற்றும் இடங்களிலும் பலத்த போலீஸ்  பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis