முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கக் கூடாது: கமல்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் படம் திரையிட தடை கேட்டு சாய்மீரா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்தது. பதில் மனு தாக்கல் செய்ய கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக சந்திரஹாசன் பதில் மனு தாக்கல் செய்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சாய்மீரா நிறுவனம் எங்களிடம் ரூ.20 கோடி கேட்டு ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கல் செய்தது. `உன்னைப்போல் ஒருவன்' பட ரிலீஸ் சமயத்தில் இந்த வழக்கு போடப்பட்டது. அப்போது ரூ.10 கோடி டெபாசிட் செய்து படத்தை வெளியிட்டோம். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனை மறைத்து தற்போது புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது சட்டவிரோதமானது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு திரையிட தயாராக உள்ளது. இதற்கு தடை விதித்தால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago