முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.எச்.சில் படம்: புரியாதவர்கள் எதிர்க்கிறார்கள்: கமல்

சனிக்கிழமை, 5 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படம் இம்மாதம் 11-ம் தேதி ரிலீசாகிறது. 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச். மூலம் இப்படம் டி.வி.யிலும் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். டி.டி.எச். மூலம் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் இப்படத்தை திரையிடமாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்ப்பை மீறி டி.டி.எச்.சில் ஒளிபரப்புவதில் கமலஹாசன் உறுதியாக உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப பலர் எனக்கு துணையாக உள்ளனர். விவரம் புரியாதவர்கள் எதிர்க்கிறார்கள். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. நிறைய செலவு செய்து படத்தை எடுத்துள்ளேன்.நஷ்டம் எற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

பொது இடங்களில் விஸ்வரூபம் படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம் என்று கேபிள் ஆபரேட்டர்கள் சவால் விட்டு சொல்வதற்காக நான் தயங்க மாட்டேன். தொழில்நுட்பம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

பொது இடங்களில் படத்தை ஒளிபரப்பு செய்ய முடியாது. இப்படத்தை யாரெல்லாம் பார்க்கிறார்கள். பதிவு செய்கிறார்கள் என்பதெல்லாம் கவனிக்கப்படும். நான் பண நெருக்கடியில் தவிப்பதாக வதந்திகள் பரவியுள்ளன. நான் கஷ்டப்படுகிறேன் என்று யாரிடமும் சொன்னதில்லை. சாதாரண பஸ்ஸில் பயணம் செய்த நான் இப்போது  ஆடி காரில் வருகிறேன். இதை கொடுத்தது சினிமா தான். நடித்து சம்பாதித்து வசதிகளைப் பெற்றேன். பண கஷ்டம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. உலகத்தில் நடப்பதைத்தான் சினிமாவாக எடுக்கிறேன் என்று கமலஹாசன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு