முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டண உயர்வுக்கு நடிகர் சரத்குமார் கண்டனம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை, நடுத்தர மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் நம்பி இருப்பது ரயில் பயணத்தைத்தான் டீசல் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டுப்பாடு என மத்திய அரசு ஏற்கனவே இந்திய மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரயில்வே கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 2 பைசாவிலிருந்து 10 பைசா வரை  உயர்த்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

நகர்ப்பகுதிகள், புறநகர்  பகுதிகள் என அனைத்துப்பகுதி மக்களும் பயன் படுத்தும் பொதுவான போக்குவரத்து வசதியை அளித்துவரும் ரயில் பயணக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். ரயில்களின் பராமரிப்பு மோசமாக இருக்கிறது. பல ரயில்களில் போதுமான பெட்டிகள் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் பல்வேறு ரயில் தடப்பணிகள் நிறைவு பெறவில்ல. மக்கள் இன்றும் ரயில் பயணத்தை கஷ்டப்பட்டுத்தான் தொடர முடிகிறது. பண்டிகைக் காலங்களில் ரயிலில் இடம் கிடைக்காமல் குடும்பத்தோடு தவித்து நிற்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு ரயில்வே கட்டணத்தை மட்டும் உயர்த்தியிருப்பது எந்த விதத்தில் நியாயம்? நிதி நிலையை சமாளிக்க நல்ல திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத மத்திய அரசு அந்த சுமையை மக்கள் மீதே திணிக்க நினைப்பது  மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு நடிகர் சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்