முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலசலிங்கம் பல்கலையில் ஸ்ரீஆண்டாள் இசை ஆல்பம் வெளியீடு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, ஜன. 11 - ஸ்ரீவில்லி. ஆண்டாளின் புகழ் பாடும் ஸ்ரீஆண்டாள் எனும் இசை ஆல்பம் வெளியீட்டு விழா கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தெரிவித்தார். பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ஸ்ரீவில்லி கலசலிங்கம் பல்கலை கழகத்திற்கு வருகை தந்தார். அவரை வேந்தர் ஸ்ரீதரன், பதிவாளர் டாக்டர் வாசுதேவன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார்த்திக் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கோதை ஆண்டாள் குறித்து 12 பாடல் அடங்கிய இசை ஆல்பம் தயாராகி உள்ளது. ஆண்டாள் பிறந்த மண்ணில் ஆல்பம் வெளியிட உள்ளோம். முதலில் கலசலிங்கம் பல்கலையில் தமிழக பிரபலங்கள் முன்னிலையில் வெளியிட உள்ளோம். இதற்கு பல்கலை நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். திருப்பாவை பாடல் பாடிய ஆண்டாளை பற்றி இந்த பாடல் தொகுப்பு வெளியிடுவது பெரிய புண்ணியம். பின்னர் அதே தினம் ஆண்டாள் சன்னதியில் பெரும் விழா எடுத்து ஆல்பம் வெளியிடப்படும். இதில் உள்ள 12 பாடல்களை எனது தந்தை, தம்பி யுவன், வயலின் வித்வான் கண்ணன், குமரேஷ் ஆகியோர் பாடி உள்ளனர். இதற்கு நான் மிகவும் புண்ணியம் செய்தவன் ஆவேன். சிறு வயதில் என் தாய் ஆண்டாளின் மகிமை குறித்து கதை மூலம் எனக்கு விளக்குவார். அதில் இருந்தே நா ஆண்டாளர் பக்தனாகி விட்டேன். இந்த பாடல் தொகுப்பினை என் தாயாருக்கு சமர்ப்பிக்கின்றேன். 6 மாத காலம் இந்த பாடல் உருவாக உழைத்தோம். இசை கேட்டால் மனம் இதமாகும். இசை ஒரு கடல். இந்த ஆல்பம் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஆண்டாள் கோவில் திருப்பணிக்கே கொடுக்கவுள்ளோம். இந்த ஆல்பம் வெளியிட ஒத்துழைப்பு வழங்கிய பல்கலைக் கழக வேந்தர் ஸ்ரீதரன் மற்றும் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்