முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பயங்கர நிலச்சரிவு - 43 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

சீனா, ஜன, - 14 - சீனாவில் கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 43 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. சீனாவின் யுனான் மாகாணத்தில் கடுமையான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைக்கிராம பகுதிகளில் இன்று காலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. கெளபோவ் கிராமத்தில் இந்த மிகமோசமான நிலச்சரிவுக்கு அந்த மலைக் கிராமம் அடியோடு அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மீட்பு பணியினர் மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ்டுப்பட்டுள்ளனர். இதுவரை 43 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மழை தொடரும் என வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. தொடர் மழையால் அங்கு மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!