முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: ரட்வன்ஸ்கா - ஹெர்பர் முன்னேற்றம்

Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 17 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரட்வ ன்ஸ்கா மற்றும் ஹெர்பர் ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்று 3-வது சுற் றுக்கு முன்னேறினர். இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் முக்கிய நகரமான மெல்போர்னி ல் கடந்த சில நாட்களாக வெகு விமர் சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது   காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீரா ங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப் பில் ஆழ்ந்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2- வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் போலந்து வீராங்கனை ரட்வன்காவு ம், ருமேனிய வீராங்கனையும் மோதி னர். 

இந்தப் போட்டியில் 4 -ம் நிலை வீராங் கனையான ரட்வன்ஸ்கா 6 -3, 6 -3 என்ற நேர் செட் கணக்கில் இரினாவை வீழ் த்தி 3 -வது சுற்றுக்குள் நுழைந்தார். 

இதே போல 5 -ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர்ப ரு ம் 3 -வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் 6 -3, 6 -1 என்ற நேர் செட் கணக்கில் செ க். குடியரசு வீராங்கனை லூசினாவை வென்றார். 

15-ம் நிலை வீராங்கனையான சிபுல் கோவா அதிர்ச்சிகரமாக தோற்றார். சுலோவேக்கிய வீராங்கனையான அவ ர் 2- வது சுற்றில், 6 -7(8), 4 - 6 என்ற கணக்கில் ரஷ்ய வீராங்கனை வாலிரி யாவிடம் தோற்றார். 

இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் 2 -வது சுற்றில் போராடி தோற்றார். அவர் இந்த சுற்றில் போலந்தின் முன்னணி வீர ரான ஜாகோவிச்சுடன் மோதினார். 

இதில் உலக தரவரிசையில் 24 - வது இடத்தில் இருக்கும் போலந்து வீரர் 7 - 6, 6 -3, 1 -6, 0 -6, 6 -3 என்ற செட் கணக் கில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: