மும்பை அணியின் பயிற்சியாளராக டெண்டுல்கரின் மகன்!

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், ஜன. 24 - கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், 13 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் விளையாடவில்லை. மாறாக அணியின் பிசிக்கல் டிரெய்னராக மாறியுள்ளார். 

சச்சினைப் போலவே அவரது மகன் அர்ஜூனும் கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார். சமீபத்தில் அவரை மும்பையின் 13 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்த்தனர். இது வரவேற்பையும், பெரும் சர்ச்சையையும் ஒருசேர ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது ஆடும் லெவன் அணியில் அர்ஜூன் சேர்க்கப்படவில்லை. 

மாறாக அவர் பிசிக்கல் டிரெய்னராக மாறியுள்ளார். மும்பைக்கும், குஜராத்துக்கும் இடையிலான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர், ஆடும் அணியில் சேர்க்கப்படவில்லை. இது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: