முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படம்: தடை உத்தரவு 28-​ம் தேதி வரை நீடிப்பு

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன. 25 -​ விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தடை உத்தரவு 28-​ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது . கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம்  இன்று (25-​ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவை நீக்க கோரி கமல் சார்பில் நேற்று  சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கமல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார்.

இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. நேற்று பிற்பகல் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞா நவநீத கிருஷ்ணன் வாதிடும்போது, 23 முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிராக மனு அளித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் தற்காலிகமாக படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். பினார் கமல் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி,நாளை மறுநாள் நீதிபதிகள் படத்தை பார்க்கிறோம், ன்னர் 28- தேதி இதுபற்றி தீர்ப்பு கூறுகிறோம்.ஆகையால்

28-ம்தேதி வரை இந்தத்தடை நீக்கும் என்றார். 

கமல் வீடு-அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு:

கமலின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடந்தது. ஏற்கனவே தனக்கு சிலர் மிரட்டல் விடுத்ததாக கமல் போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் அவரது அண்ணன் சந்திரஹாசனும் போலீசில் மனு கொடுத்தார்.

இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சப்-​இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் வாயிலில் நிறுத்தப்பட்டு உள்ளனர். எவரேனும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வேன்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதுபோல் கொட்டி வாக்கத்தில் உள்ள கமலஹாசன் வீட்டிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அந்த வழியாக வருவோர் போவோரை போலீசார் கண்காணிக்கின்றனர். விஸ்வரூபம் படத்தை இரு வாரங்களுக்கு திரையிடுவது இல்லை என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு எடுத்துள்ளனர். ஆனாலும், விஸ்வரூபம் வெளியாகும் தியேட்டர்களில் கமலின் பேனர்கள், கட் அவுட்களை ரசிகர்கள் பிரமாண்டமாக வைத்துள்ளார்கள். எனவே சில தியேட்டர்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago