எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.26 - நார்வே நாட்டில் நடக்க விருக்கும் நான்காவது தமிழ் திரைப்பட விழாவில் 15 தமிழ் படங்கள் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளன. இது குறித்த விபரம் வருமாறு:- ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான லண்டன், பெர்லின் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் திரைப்படவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் படங்களைத் தேர்வு செய்து அதில் நடித்த நடிகர், நடிகை, இயக்குனர் மற்றும் தொழில் நுட்பகலைஞர்களை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறார்கள் நார்வே திரைப்பட விழா குழுவினர்.
அந்த வகையில் 2013 -ம் ஆண்டில் நான்காம் ஆண்டு விழாவாக அண்மையில் திரைக்கு வந்த தரமான படங்களை தேர்வு செய்து பரிசு வழங்கி பாராட்ட உள்ளனர். இவ்விழா வருகிற ஏப்ரல் மாதம் 24 -ம் தேதி தொடங்கி 29 -ம் தேதிவரை நடக்க உள்ளது.
இதில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 புதுமுகங்கள் நடித்த அட்டக்கத்தி, பிரபு சாலமன் இயக்கிய கும்கி, அன்பழகன் இயக்கத்தில் உருவான சாட்டை, பிரகாஷ்ராஜ் நடித்த தோனி, புதுமுகங்கள் நடித்த ராட்டினம், சீனுராமசாமி இயக்கிய நீர்பறவை, சந்தானம் உயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, புதுமுகங்கள் தேவை, ஆஸ்திரேலியா படமான இனியவளேகாத்திருப்பேன். கனடா படம் சகாராப் பூக்கள் இலங்கை படம் இனி அவன் ஆகிய படங்கள் கலந்து கொள்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை நார்வே திரைப்பட விழா இயக்குநர் வசீகரன் கவனிக்கிறார். விழாவில் மேற்கண்ட படங்களில் பங்கேற்றுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


